அரசாங்க பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையில் முதலாம் ஆண்டிற்கு அரசாங்க பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்க்கும் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 360,000 ஆக இருந்த முதலாம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டில் 298,000 ஆகக் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுவொரு ஆபத்தான வீழ்ச்சி என புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாரிய வீழ்ச்சி
நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பிய ரவி கருணாநாயக்க, அதனை சரி செய்ய அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் குறிப்பிட்டார்.
பிறப்பு எண்ணிக்கையில் ஏற்பட்ட குறைவு இதற்கான பிரதான காரணமாகும். மேலும் கணிப்பின்படி, இந்த எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டுக்குள் 196,209 ஆக குறையலாம் என கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரட்ன குறிப்பிட்டுள்ளார்.
சீர் செய்ய நடவடிக்கை
கடந்த 05 ஆண்டுகளில் அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டு 298,959 ஆகவும், 2022 ஆம் ஆண்டு 303,868 ஆகவும், இருந்தது
இந்த ஆபத்தான நிலையை சீர்செய்ய எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பில் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.





இந்தியா மீதான ட்ரம்பின் கடும் கோபத்திற்கு உண்மையான காரணம்... ரஷ்ய எண்ணெய் இறக்குமதி அல்ல News Lankasri

உலகின் மிகப்பெரிய யுரேனிய உற்பத்தி நாட்டில் முதல் அணுமின் நிலையம்! பணியைத் தொடங்கிய ரஷ்யா News Lankasri
