கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு
"முதலாம் தரத்துக்கு மாணவர்களை உள்வாங்குவது அமைச்சின் ஊடாக அல்லாமல் அந்தந்த பாடசாலைகளினால் மாத்திரமே மேற்கொள்ளப்படும்" என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளது.

விண்ணப்பப் படிவங்கள்
”2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தர கற்கைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தாம் விண்ணப்பிக்கும் பாடப்பிரிவை கொண்டிராத பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள், தங்களின் விண்ணப்பப் படிவங்களை சம்பந்தப்பட்ட பாடசாலைக்கு அனுப்ப வேண்டும்.
மாறாக அவற்றை அமைச்சகத்திற்கு அனுப்பக்கூடாது என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்கள்
இடைநடுவே வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை 2022ஆம் ஆண்டின் 3ஆம் தவணை ஆரம்பமான டிசம்பர் 5ஆம் திகதியுடன் நிறுத்தப்பட்டுள்ளது.
2023 மார்ச் 24ஆம் திகதியன்று 2022ஆம் ஆண்டின் மூன்றாம் தவணை முடிவடைந்த பின்னரே பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்களின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து 2023ஆம் ஆண்டில் இடைநடுவே வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri