கடும் அச்சத்தில் அரசாங்க ஊழியர்கள்.. திணற வைக்கும் அநுரவின் நகர்வுகள்!
அரசாங்கம் ஒன்றின் முதுகெலும்பாக திகழ்வு அரசு துறையாகும். எனினும் இலங்கையில் அரச துறையில் பல்வேறு ஊழல்கள் இடம்பெற்றுள்ளமை பலரும் அறிந்தது.
ஆட்சியாளர்களின் ஆதரவுடன் அரச துறைகளில் உயர்பதவி வகித்தவர்கள் மற்றும் அவர்களுக்கு கீழியங்கும் அதிகாரிகள் என பலரும் ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சாதாரணமாக பொதுமகன் ஒருவர் தமது தேவையை பூர்த்தி செய்ய லஞ்சமாக பணம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது.
வீதியில் பயணிக்கும் சாரதி முதல் ஆவணங்களை பெற்றுக்கொள்வோர் வரை லஞ்சம் செலுத்தி தமது தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை அரச அதிகாரிகளினால் ஏற்பட்டிருந்தது.
இவ்வாறான சமகால அநுர அரசாங்கம் ஊழலில் ஈடுபடுவோரை வரிசையாக கைது செய்து வருகிறது. இது கடந்த ஆட்சியாளர்களின் அதிகாரத்திற்குள் ஒழிந்திருந்த பல உயர் அதிகாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக முக்கிய அரச துறைகளின் உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். அந்தப்பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இப்படிக்கு அரசியல் நிகழ்ச்சி...




