அடுத்த தேர்தலில் அரசாங்கத்திற்கு 20 வீத ஆதரவு கூட கிடைக்காது-ஜீ.எல்.பீரிஸ்
எதிர்காலத்தில் நடக்கும் தேர்தலில் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அணிக்கு 20 வீத மக்கள் ஆதரவு கூட கிடைக்காது என சுதந்திர மக்கள் காங்கிரஸில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க முயற்சி

இதனை அவர்கள் அறிந்துள்ளதன் காரணமாக ஏதாவது ஒன்றை செய்து, உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்து வருகின்றனர். நாட்டில் பல்வேறு அணிகள் பல நிலைப்பாடுகளை கொண்டுள்ளன.
கொழும்பில் நேற்று நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த சம்பவமானது எதிர்க்கட்சித் தலைவர் நிராகரிக்கப்பட்ட சம்பவமாக நான் காணவில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி கிடைக்க அரசின் நேர்மை முக்கியமானது

அதேவேளை இந்த வருட இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி கிடைக்கும் என அரசாங்கம் எதிர்பார்த்தாலும் இதில் அரசாங்கத்தின் நேர்மையே முக்கியமானது.
மக்கள் ஆணையுள்ள அரசாங்கத்துடனேயே தாம் கொடுக்கல் வாங்கல் செய்ய தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெளிவாக கூறியுள்ளது எனவும் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.