அரிசி இறக்குமதி செய்யப்பட்டமைக்கான காரணம்: அமைச்சர் விளக்கம்
இம்முறை பெரும்போகத்தில் நெற் செய்கை பாதிக்கப்பட்டதனால் அரிசி இறக்குமதி செய்ய நேரிட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
வர்த்தக மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பெரும்போக நெல் விளைச்சலை நெல் விற்பனை சபை மற்றும் சதொச நிறுவனங்கள் கூட்டாக இணைந்து கொள்வனவு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
வரி அறவீடு
சுமார் 4300 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் அரிசி இறக்குமதியின் போது ஒரு கிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபா வரி விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளை பாதுகாக்கவும் மித மிஞ்சிய அளவில் அரிசி இறக்குமதி செய்யப்படுவதனை தடுக்கவும் இவ்வாறு வரி அறவீடு செய்யப்படுவதாகவும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |