வெளிப்படைத்தன்மையை அரசாங்கம் கையாளும் - தினேஷ் குணவர்தன உறுதி
மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க பிரச்சினைகள் குறித்து வெளிப்படையான மற்றும் வெளிப்படைத்தன்மையை அரசாங்கம் கையாளும் என்று வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பொது அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் மற்றும் நாட்டின் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளிடம் அவர் இந்த உறுதியை நேற்று வழங்கியுள்ளார்.
பொது அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் பேசிய வெளியுறவு அமைச்சர், சர்வதேச முன்னணியில் எழுந்துள்ள இனங்களிடையே மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க பிரச்சனைகள் குறித்து திறந்த மற்றும் வெளிப்படைத்தன்மையை அரசாங்கம் கையாளும் என்று கூறியுள்ளார்.
வெளியுறவு அமைச்சில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நீதி அமைச்சர் அலி சப்ரியும் பங்கேற்றிருந்தார்.
இந்த கலந்துரையாடலில் பொது அமைப்புக்களின் ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கலுபஹான பியரத்ன தேரர், மாற்று மையத்தின் பாக்கியசோதி சரவணமுத்து, பெப்ரல் அமைப்பின் ரோஹன ஹெட்டியாராச்சி, இலங்கை மெதடிஸ்ட் தேவாலயத்தின் ஆயர் ஆசிரி பெரேரா, கலாநிதி ஜோ வில்லியம் மற்றும் தேசிய சமாதானம் சபையின் ஜெஹன் பெரேரா, இலங்கை முஸ்லீம் கவுன்சிலின் ஹில்மி மொஹமட், பொது சமூக ஆர்வலர் கலாநிதி தயானி பனாகொட ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri