அரசாங்கம் ஊடகங்களை அடக்குவதற்கு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு
அரசாங்கம் ஊடகங்களை அடக்குவதற்கு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழில்சார் ஊடகவியலாளர் அமைப்பு இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இலங்கையில் ஊடகவியலாளர்களின் ஆள் அடையாளத்தை உறுதி செய்ய ஊடக அமைச்சினால் வழங்கப்பட்ட அடையாள அட்டை பயன்பாட்டை கட்டாயப்படுத்தியமைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம், ஊடகவியலாளர்களுக்கு அடையாள அட்டை ஒன்றை அறிமுகம் செய்து ஊடகவியலாளர்களை மலினப்படுத்த முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது ஊடகங்கள் மீது தனது அதிகாரத்தை பிரயோகிக்கும் செயற்பாடாக கருதப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக கருத்து வெளியிடுவதற்கான உரிமையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அரசாங்கம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு அடிபணியக் கூடிய ஊடகவியலாளர்களை மட்டும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்கச் செய்யும் முயற்சியாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவிப்பினை கருத வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து ஊடகவியலாளர்களும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டுமென குறித்த ஊடக அமைப்பு வலியுறுத்தியுள்ளது.