இலங்கையில் பேருந்து ஓட்டுநர்களை கண்காணிக்க AI பயன்படுத்தவுள்ள அரசாங்கம்
இலங்கையில் பேருந்து ஓட்டுநர்களைக் கண்காணிக்கவும், பொதுப் போக்குவரத்தில் ஆசனப்பட்டிகளை கட்டாயமாக்கவும், செயற்கை நுண்ணறிவைப்(AI) பயன்படுத்தவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையில் ஆண்டுதோறும் சராசரியாக 3,000 பேர் என்ற அளவில் வீதி விபத்துக்களால் இறப்புகள் பதிவாகின்றன.
இதனையடுத்து, அடுத்த ஆண்டு முதல் பேருந்துகளில் ஓட்டுநர் கண்காணிப்பு அமைப்புகள் பொருத்தப்பட உள்ளன.
முதற்கட்ட விசாரணைகளில்
அதே நேரத்தில் ஜூன் முதல் பொதுப் போக்குவரத்தில் ஆசனப்பட்டிகள் கட்டாயமாக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சிறந்த ஓட்டுநர் கலாசாரத்தை வளர்ப்பதற்கும் பாதுகாப்புத் தரங்களை மேம்படுத்துவதற்குமாக, இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கொத்மலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்துக்கான காரணம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும்;; அமைச்சர் கூறியுள்ளார்.
முதற்கட்ட விசாரணைகளில் ஓட்டுநரின் தவறு எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
