நாட்டில் கோவிட் பரவல் உச்சத்தில்! பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை
இலங்கையில் தற்போது கோவிட் பரவல் உச்ச நிலைக்கு வந்துள்ளதுடன் இந்த வேகம் மேலும்அதிகரித்தால், மிகவும் துரதிஷ்டவசமான நிலைமை ஏற்படும் என்பதால், இது குறித்து அவதானமாகவும் புரிந்துணர்வுடனும் செயற்பட வேண்டும் என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
எப்படியாவது கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது நாட்டில் தினமும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், மரணங்களும் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலைமை தொடர்பில் புரிந்துணர்வு செயற்பட வேண்டும். நாடு முழுவதும் முடக்கப்படவுள்ளதுடன் தமக்குத் தேவையான பொருட்களைச் சேகரித்துக் கொள்ள மக்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
முடக்கப்படும் தினங்களில் தேவையற்ற வகையில் ஒன்று கூட வேண்டாம்.
தற்போது அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
மயில் விஷயத்தில் பாண்டியன் எடுத்த முடிவு, சிக்கிய கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam