அநுர நாடாளுமன்றில் அறிவித்த இழப்பீடுகளை வழங்குமாறு கோரிக்கை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றில் தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவித்த இழப்பீடுகளை வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
இழப்பீடு வழங்குவது குறித்து அறிவித்தால் அது குறித்த சுற்றறிக்கைகளை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
குறிப்பாக எந்த அடிப்படையில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதனை அரசாங்கம் நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நட்ட ஈடு வழங்குவது தொடர்பில் எவ்வாறு மதிப்பீடு செய்வது என்பதனை அரசாங்க அதிகாரிகளுக்கு தெளிவாக அறிவுறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் ஜனாதிபதி என்ற ரீதியிலும் நிதி அமைச்சர் என்ற ரீதியிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவரது அரசாங்கம் எவ்வாறு இழப்பீடு வழங்குவது என்பது குறித்த தெளிவான அறிவுறுத்தல்களை எழுத்து மூலம் வெளியிட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.
இந்த அறிவுறுத்தல்கள் அமைய அதிகாரிகள் செயல்படுவார்கள் இதுவே வழமையான நடைமுறையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
மாறாக தம்மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவது இந்த நேரத்தில் பொருத்தமற்றது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.