அர்ஜூன் அலோசியஸிடம் இருந்து வரிப்பணம் அறிவிடப்படும்: அரசாங்கம் உறுதி
டபிள்யூ.எம். மென்டிஸ் அன்ட் கம்பனி லிமிடெட் மூலம் செலுத்த தவறிய 3.5 பில்லியன் ரூபாய் வரிப்பணத்தை மீட்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த மாநாட்டில் நேற்று (15.10.2024) உரையாற்றிய அவர், நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸுக்கு வரி செலுத்தாமை காரணமாகவே 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டாலும், அரசுக்கு 3.5 பில்லியன் வரி பணம் அறிவிடப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வரிப்பணத்தை மீட்பதற்கான நடவடிக்கை
அத்துடன், அந்த 3.5 பில்லியன் ரூபாய் வரிப்பணத்தையும் மீட்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் விஜித ஹேரத் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |