இந்திய உளவுத்துறையின் எச்சரிக்கைகள் பற்றி அரசாங்கம் தகவல் வெளியிட வேண்டும்: சஜித் ரணிலிடம் கோரிக்கை
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு முன்னதாக இந்திய உளவுத்துறையின் எச்சரிக்கைகள் பற்றிய முழு விபரங்களை இலங்கை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்(Ranil Wickremesinghe) கோரிக்கை விடுத்துள்ளார்.
2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் 270 பேர் கொல்லப்பட்டனர். இந்தநிலையில் குறித்த தாக்குதல்களுக்கு முன்னதாக இந்திய உளவுத்துறை எத்தனை முறை எச்சரித்துள்ளது என்பதை வெளியிடவேண்டும்.
இலங்கை புலனாய்வுப்பிரிவு
அத்துடன் இந்திய உளவுத்துறை அனுப்பிய வாட்ஸ்ஆப்(whatsapp) செய்திகளை யார் நீக்கினார்கள் என்ற விடயங்களையும் வெளியிடவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை தாக்குதல்கள் குறித்து இந்திய புலனாய்வுப் பிரிவினர் ‘தெளிவான தகவல்களை’ இலங்கையின் புலனாய்வுப்பிரிவினருக்கு வழங்கியுள்ளதாக நாடாளுமன்றத்தில் பிரேமதாச கூறியுள்ளார்.
இந்தநிலையில தற்கொலை குண்டுதாரிகளுடன் உள்ளூர் புலனாய்வு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அதேநேரம் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) பயன்படுத்திக்கொண்டதாக பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் மீது சுமத்தியுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு மத்தியிலேயே சஜித் பிரேமதாசவினால் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் கடைகளில் சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுமென கூறினார்கள் - நினைவுபடுத்தப்படும் அமைச்சர் மனுஷ
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |