மாகாண சபைகள் முறை ஒழிக்கப்பட வேண்டும்: சன்ன ஜயசுமன - செய்திகளின் தொகுப்பு
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் செயற்பாட்டின் அடிப்படையில் தேர்தல்களைப் பிற்போட அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னாள் சுகாதார ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குற்றம் சுமத்தியுள்ளார்.
டலஸ் அழகப்பெரும தலைமையிலான அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதாயின் அதற்கு முன் 13ஆம் திருத்த சட்டம் மூலமாக உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் முறை ஒழிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இது தொடர்பில் பரந்துபட்ட கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், துரித கதியில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதினை மேற்கொள்ள இடமளிக்க முடியாது என்றும் கருத்து வெளியிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |