வவுனியாவில் அம்பியுலன்ஸ் வண்டியிலேயே உயிரிழந்த கோவிட் நோயாளி
கொரோனா தொற்றாளர் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த 24ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்றாளர் ஒருவர் வவுனியாவில் இருந்து அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் வண்டியில் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.
82 வயதுடைய முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
திடீரென ஏற்பட்ட சுவாஸ பிரச்சினை காரணமாக அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவர் தொற்றாளர் என்பது உறுதியாகியுள்ளது.
உயிரிழந்த நபருக்கான தகன நடவடிக்கை அனுராதபுரம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இலங்கையின் முதல் கரிநாள்...! 1 நாள் முன்

கேட் மிடில்டன் தமது பிள்ளைகளுக்கு விதித்துள்ள கடுமையான ஒரு சட்டம்: மூவரும் மீறுவதில்லையாம் News Lankasri

அழகில் ரீல் அம்மா நயன்தாராவை மிஞ்சும் 18 வயது நடிகை.. புகைப்படத்தை பார்த்து ஆச்சிரியப்பட்ட ரசிகர்கள் Cineulagam
