பழிவாங்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படவில்லை
அரசாங்கம், பழிவாங்கும் நோக்கில் செயற்படவில்லை என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
குற்ற இராச்சியமாக மாறியிருந்த இலங்கையை சரியான பாதைக்குக் கொண்டுவருவதற்கும், திருடர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கும் கிடைத்த மக்கள் ஆணையையே அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது என என தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சட்டம் அனைவருக்கும் சமமாகவே நடைமுறைப்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
நிலக்கரி இறக்குமதி மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஆணைக்குழு நியமிக்கப்பட்ட போது, அமைச்சர் குமார ஜயகொடி பதவி விலகியமை அரசாங்கம் சட்டத்திற்கு அளிக்கும் மரியாதையைக் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
அமைச்சர் குமார ஜயகொடி 100% நிரபராதி என்பதில் முழு நம்பிக்கை உள்ளபோதிலும், சட்ட நடவடிக்கைகளுக்கு வழிவிட்டு சுயாதீனமாக விசாரணைகள் நடக்கவே அவர் பதவியிலிருந்து விலகினார் என குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 160 உறுப்பினர்கள் மீதும் எந்தவித ஊழல் அல்லது குற்றச்சாட்டுகளும் கிடையாது என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.