அரசாங்கம் கொள்கைகளுக்கு புறம்பாக செயற்படுகின்றது
அரசாங்கம் கொள்கைகளுக்கு புறம்பாக செயற்படுகின்றது என முன்னிலை சோசலிச கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பு மாநகரசபையின் மேயர் தெரிவு தொடர்பில் இரகசிய வாக்கெடுப்பினை தேசிய மக்கள் சக்தி கோரியது எதனால் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
முன்னிலை சோசலிச கட்சியின் நிறைவேற்றுச் சபை உறுப்பினர் துமிந்த நாகமுவ இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
இரகசிய வாக்கெடுப்பு
இரகசிய வாக்கெடுப்பு நடத்துவது என்பது பகிரங்கமாக குறிப்பிட முடியாத இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என்பதையே வெளிப்படுத்துகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரகசிய இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட காரணத்தினால் வாக்களித்தவர்களுக்கு பகிரங்கமாக வாக்களிக்க முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாக்குகளை பெறுவோரும் தாங்கள் யாரிடம் வாக்குகள் பெறுகின்றோம் என்பதை அம்பலப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரகசிய வாக்கெடுப்பு மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூறிய அரசியல் கலாசாரத்தை அவர்களே சவாலுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன் ஊடாக தேசிய மக்கள் சக்தியும் டீல் அரசியலில் ஈடுபட்டுள்ளமை வெளிச்சமாகியுள்ளது என துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
