சரியான முடிவுகளை எடுத்திருந்தால் அரசாங்கம் அச்சப்பட வேண்டியதில்லை-திஸ்ஸ அத்தநாயக்க
அரசாங்கம் சரியான தீர்மானங்களை எடுத்திருக்குமாயின் தேர்தலுக்கு அச்சப்பட வேண்டிய தேவையில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மார்க்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கம் சரியான முடிவுகளை எடுக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது
அரசாங்கம் சரியான முடிவுகளை எடுத்திருக்குமாயின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்களின் நிலைப்பாட்டை அச்சமின்றி எதிர்நோக்க வேண்டும். அரசாங்கம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த அச்சப்படுகிறது.
இதன் மூலம் அரசாங்கம் மக்களுக்காக சரியான முடிவுகளை எடுக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது. தேர்தல் எந்த நேரத்தில் நடத்தப்பட்டாலும் அதனை எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது.
மக்களின் வாக்குரிமை பறிக்க இடமளிக்க வேண்டாம்
அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைவான மக்களின் வாக்குரிமையை பறிக்க எந்த வகையிலும் இடமளிக்க வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
வேட்புமனு கோரல், அதற்கான அவசியமான சட்டரீதியான வர்த்தமானி அறிவித்தல் என்பவற்றை தேர்தல் ஆணைக்குழு இந்த வாரம் அறிவிக்கும் என எதிர்க்கட்சிகள் நம்புவதாகவும் அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
