தனியார் ஊடகம் ஒளிபரப்பிய நாடாளுமன்ற பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான காணொளி
கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற அறைக்குள் இடம்பெற்ற சம்பவங்கள் அடங்கிய காணொளியை தனியார் ஊடகங்களுக்கு வெளியிட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சபாநாயகர் இருக்கையின் இடது புறத்தில் உள்ள இடத்தில் இருந்து கையடக்கத் தொலைபேசி மூலம் நாடாளுமன்ற அறைக்குள் நடந்த சம்பவங்கள் காணொளி படம் பிடிக்கப்பட்டு தனியார் தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கும், சபை நடவடிக்கைகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இது சட்டவிரோதமான செயலாகும் என்று குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன், சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை வெளிப்படுத்துமாறு சபாநாயகரிடம் கேட்டுள்ளார்.
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri