ஓரிரு வாரங்களில் மும்மடங்காக கோவிட் தொற்று அதிகரிக்கும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் சுகாதார நெருக்கடி உருவாகி வருவதை மருந்து உற்பத்தி வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஓரிரு வாரங்களில் கோவிட் தொற்றுக்கள் இருமடங்காகவோ அல்லது மும்மடங்காகவோ இருக்க வாய்ப்புள்ளது என்று அவர் எச்சரித்துள்ளார்.
இதனையடுத்து சுகாதார அதிகாரிகள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், பிசிஆர் மற்றும் என்டிஜன் சோதனைக் கருவிகள் மற்றும் ஒக்ஸிஜன் பொருட்களை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கட்டுப்பாடுகளை தளர்த்துவதை மக்கள் தவறாகப் பயன்படுத்துவது தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வழிவகுத்தது.
அத்துடன் தொழிற்சங்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஆர்ப்பாட்டம் செய்பவர்களும் நோய் பரவுவதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தினர். அதிக எண்ணிக்கையில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடமிருந்து, தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்களே, வெளியூரவர்களை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்ட ஊர்வலங்களுக்கு அழைத்து வந்தன என்றும் சன்ன ஜெயசுமன குறிப்பிட்டுள்ளார்.
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan