வவுனியாவில் இளவயதினரை தாக்கும் கோவிட் தொற்று! - 7 பேர் மரணம்
வவுனியா மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் மே.20 வரையான காலப்பகுதியில் 655 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் இளவயதினை சேர்ந்தவர்கள் எனச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 544 பேரும், வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 54பேரும், வவுனியா தெற்கில் 23 பேரும், செட்டிக்குளம் பிரிவில்34 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களில் 19 வயதிற்குட்பட்ட 50 தொற்றாளர்களும், 19 தொடக்கம் 30 வயதிற்கிடைப்பட்ட வயதுடைய 273 தொற்றாளர்களும், 31-40 வயதிற்குட்பட்ட 131 தொற்றாளர்களும், 41 வயதிற்கு மேற்பட்ட 197 தொற்றாளர்களும் இனம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாகக் கடந்த வருடம் ஒருவரும் இவ்வருடம்
இதுவரையான காலப்பகுதியில் 6பேர் என மொத்தம் 7 பேர் மரணமடைந்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.