கோவிட் தொற்றுக்கு இலக்காகி 14 வயது பாடசாலை மாணவி உயிரிழப்பு
திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக இன்று அதிகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 14 வயதான பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளதாக பலப்பிட்டிய வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பாடசாலை மாணவிக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கோவிட் வைரஸ் தொற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அம்பலாங்கொடை தர்மாசோக கல்லூரியில் கல்வி கற்று வந்த, அம்பலாங்கொடை ஹல்வத்துர விலோகொட பிரதேசத்தை சேர்ந்த 14 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நெஞ்சு வலி மற்றும் மூச்சு திணறல் காரணமாக மாணவி இன்று அதிகாலை அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
உயிரிழந்த மாணவியின் மரண பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
