இலங்கையில் கோவிட் தொற்றால் இதுவரை சுமார் 4,200 கர்ப்பிணி பெண்கள் பாதிப்பு
இலங்கையில் இதுவரை சுமார் 4,200 கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் 900 பேர் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளனர் என்று குடும்ப சுகாதார பணியக பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டி சில்வா கூறியுள்ளார் .
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் செய்தியாளர் சந்திப்பில் இன்று கருத்துரைத்த அவர்,
கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட 32 கர்ப்பிணி தாய்மார்கள், இதுவரை உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
75% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தற்போது வரை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. கர்ப்பிணித் தாய்மார்கள் நெரிசலான இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் கோவிட் போன்ற அறிகுறிகள் உள்ளவர்களைத் தவிர்க்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கோவிட் தொற்று இல்லாத, கருவுற்ற பெண்கள், வீட்டிலுள்ள உறுப்பினர்களிடம் இருந்து விலகி இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.



