இளைஞர்களின் தொழிற் பயிற்சிக்கு ஜனாதிபதி நிதியத்திடம் இருந்து விசேட உதவி
இளைஞர்களின் தொழிற்பயிற்சிக்கு ஜனாதிபதி நிதியில் இருந்து உதவிகளை வழங்க திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் "என்னிலிருந்து ஆரம்பித்து இலங்கையை வெற்றி கொள்வோம்" மக்கள் நடமாடும் சேவை நிகழ்வுத்தட்டத்தின் இரண்டாவது நாள் நிகழ்வு இன்று (01) அனுராதபுரத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பொருளாதார திட்டம்
மேலும் கருத்து தெரிவித்த அவர், “எரிபொருள் , மின்சாரம் , பால்மா , மருந்து இல்லாது இருந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது என நினைத்தோம்.
இன்று 4 .4 பில்லியன் கையிருப்பு டொலரைப் பெற்றுக்கொள்ளும் அளவிற்கு எங்களால் உழைக்க முடிந்துள்ளது . டொலர்களை வங்கிகள் மூலம் அனுப்ப விளம்பரம் செய்ய நடவடிக்கைளை மேற்கொண்டோம்.
இது நிதியமைச்சின் வேலை என விட்டு ஒதுக்காமல் விளம்பரத்தை நாம் கையாண்டோம். இவ்வாறு, விளம்பரங்களை விளம்பரப்படுத்த எம்மிடம் பணம் இல்லை எனவே நண்பர்களின் பணத்தில் விளம்பரத்தை செய்து நாட்டிற்குள் பணத்தை கொண்டு வருவதற்காக நாம் பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தினோம்.
அந்த வகையில்,சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு கொண்டு வர முடிந்தது. எங்களால் வெற்றிகொள்ள முடியாது என நினைத்த காரியமே இதுவாகும் எனது அமைச்சின் அதிகாரிகள் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாலும் வெளிநாட்டு தொழிலாளிகளின் உதவியினாலும் இன்று நாம் வாழ சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
விசேட பயிற்சி திட்டம்
உங்களுக்கு ஏற்ற வேலையைப் பெற்று நீங்கள் தொழிலதிபராக வேண்டும் என்றால் நீங்கள் தொழில்முறை கல்வியைப் பெற வேண்டும்.
எம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். எமது நாடு அபிவிருத்தியடைந்து இருந்தால் நம் நாட்டின் பெயரால் இந்தக் கடலைப் பிரிக்க முடியாதா? அப்படி ஒரு விடயத்தை நாம் எண்ணவில்லை.
1956 ல் முதலில் வசப்பட்டோம் சுருங்கச் கூறின் , யாரோ வந்து நான் புத்தனாக மாறிவிட்டேன், தனக்கு அதிகாரம் இருக்கிறது என்று சொல்லும் சூழ்நிலையில் இருக்கிறோம். நாம் ஒரு கனவை உருவாக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் அனைவரும் வழிதவறி விட்டனர் .
எனவே அவர்களுக்கு நாம் வழிகாட்ட வேண்டும். அப்போதுதான் நாம் உலகை வெல்ல முடியும். நாட்டை வெல்ல வேண்டுமானால், அதற்கு நம் நாட்டு இளைஞர்களை தயார்படுத்த வேண்டும். விருப்பத்தின்படி பயிற்சித் திட்டங்களை தெரிவு செய்து ஜனாதிபதி நிதியில் இருந்து பயிற்சிகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி என்னிடம் கூறியுள்ளார்.
இதன்படி ஒரு வருடத்திற்குள் பத்தாயிரம் இளைஞர், யுவதிகள் தொழில் பயிற்சிக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என ஜனாதிபதி என்னிடம் தெரிவித்துள்ளார்.” என்றார்.
[WRQFXWG ]
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
