எரிவாயு சம்பந்தமான பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றவில்லை்: ஒப்புக்கொள்ளும் அமைச்சர்
எரிவாயுவின் தரம் சம்பந்தமாக தற்போதைய அரசாங்கமும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் கடந்த காலத்தில் தமது பொறுப்புகளை நிறைவேற்றவில்லை என்பதை ஏற்றுக்கொள்வதாக நுகர்வோர் விவகார ராஜாங்க அமை்சசர் லசந்த அழகியவண்ண (Lasantha Alagiyawanna) தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரான கடந்த காலத்திலும் அந்த பொறுப்பு நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எரிவாயு மற்றும் அதனை பயன்படுத்தும் உதிரிபாகங்களின் தரம் சம்பந்தமாக 1960 ஆம் ஆண்டுகளில் இருந்தே எவ்வித கண்காணிப்பு நடைபெறவில்லை. இதற்கு முன்னர் எரிவாயு சம்பந்தமாக ஏற்பட்ட விபத்துகள் தொடர்பாக கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தேடிப்பார்த்து நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது இப்படியான நிலைமை ஏற்பட்டிருப்பதை தவிர்த்திருக்க முடியும்.
இரண்டு நிறுவனங்களின் சமையல் எரிவாயுவை பயன்படுத்தும் நுகர்வோரின் பாதுகாப்பு சம்பந்தமான எவ்வித கவனம் செலுத்தப்படவில்லை என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடு. இந்த நிறுவனங்கள் தமது பொறுப்புகளில் இருந்து தப்பிக்க முடியாது.
தற்போது நடத்தப்பட்டு வரும் விசாரணைகளில் கண்டறியப்படும் தகவல்களுக்கு அமைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக கூடிய பச்சமாக சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேவேளை தற்போது உரிய தரத்துடன் கூடிய சமையல் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்தும் பழைய எரிவாயு கொள்கலன்களை பயன்படுத்துவோர் பாதுகாப்புடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுப்பதாகவும் அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan
