கர்ப்பிணி பெண் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு கோவிட் தொற்று
வவுனியா, தோணிக்கல் பகுதியில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட 31 பேருக்கு இன்று கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில், நேற்றும் 177 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில், கோவிட் பரம்பலை கட்டுப்படுத்தும் முகமாக சுகாதாரப்பிரிவினரால் பரவலாக எழுமாறான அன்டிஜன் பிரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், தோணிக்கல் பகுதியில் எழுமாறாக 93 பேரிடம் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதில் கர்ப்பிணிப்பெண் உள்ளடங்களாக உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கும், தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 24 பேருக்குமாக 31 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப்பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam