திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் பதிவாகிய கோவிட் தொற்றாளர்கள்
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 149 கோவிட் தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாகவும்,ஆறு மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் இன்று (20) வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 29 பேரும், திருகோணமலை சுகாதார வைத்திய பிரிவில் 26 தொற்றாளர்களும், மூதூர் சுகாதார வைத்திய அதிகார பிரிவிற்குட்பட்ட பகுதியில் 22 பேரும், குச்சவெளியில் 21 நோயாளர்களும், தம்பலகாமத்தில் 15 நோயாளர்களும் கோமரங்கடவல சுகாதார வைத்திய பிரிவில் 11 பேரும், கந்தளாய் பிரதேசத்தில் 11 நோயாளர்களும், பதவிசிறிபுர பகுதியில் 08 பேரும், கிண்ணியாவில் ஐவரும், குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய பிரிவில் ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
இதில் 80 ஆண்களும், 69 பெண்கள் அடங்கலாக 149 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் திருகோணமலையில் 04 பேரும்
சேருவில பிரதேசத்தில் 01
மூதூரில் 01 என 6 மரணங்களும் பதிவாகியுள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
