வவுனியாவில் கோவிட் தொற்றால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் இன்று மாலை (29.08) மரணமடைந்துள்ளதுடன், இன்றைய தினம் மரணமடைந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளது என சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கோவிட் தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் மரணமடைந்துள்ளனர்.
வவுனியா, மதீனா நகர் பகுதியைச் சேர்ந்த 63 வயது ஆண் ஒருவரும், நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த 56 வயது ஆண் ஒருவருமே இவ்வாறு மரணமடைந்தவர்களாவார்.
இது தவிர, முன்னதாக இரணைஇலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும், நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரும், வவுனியா நகரப் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரும் என மூவர் மரணமடைந்தனர்.
இதன்படி 5 பேர் இன்றைய தினம் (29.08) மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
குறித்த சடலங்களையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப்பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.





அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
