எரிபொருள் பற்றாக்குறை! ஆயிரக்கணக்கான தொழிலதிபர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை
எரிபொருள் நெருக்கடி காரணமாக சுமார் 2,300 தொழிலதிபர்கள் தங்களது எரிபொருள் ஒதுக்கீடுகளை அதிகரிக்குமாறு கைத்தொழில் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், பெரிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்கள் கோரியுள்ள தேவையான எரிபொருள் ஒதுக்கீடுகளை வழங்குவதற்காக, இலங்கை அரசாங்கம் சிறப்பு அனுமதி முறையை வெளியிடுவது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் ஒதுக்கீடுகள்
தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடுகள் தங்களது செயல்பாடுகளைத் தக்கவைத்துக்கொள்ள போதுமானதாக இல்லை என்று தொழிலக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பெரிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்காக, கைத்தொழில் மற்றும் தொழிலக அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க, அமைச்சு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துடன் (CPC) ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும், இந்தத் நிறுவனங்களுக்கு தேவையான எரிபொருள் அளவுகள் ஏற்கனவே இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரதி அமைச்சரின் கூற்றுப்படி, இதுவரை சுமார் 2,300 தொழிலதிபர்கள் தங்களது எரிபொருள் ஒதுக்கீடுகளை அதிகரிக்குமாறு கைத்தொழில் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எரிபொருள் நுகர்வு விபரங்கள்
இதற்கமைய, சிறிய மற்றும் குறு அளவிலான நிறுவனங்கள் தங்களது முந்தைய எரிபொருள் நுகர்வு விவரங்களை அந்தந்த பிரதேச செயலக அலுவலகங்களில் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் தங்களுக்குத் தேவையான எரிபொருள் ஒதுக்கீடுகளைப் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அதிரடி முடிவு எடுத்து நிலா கேட்ட கேள்வி, ஆடிப்போய் நின்ற சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam