அமைச்சர்களுக்கான சலுகைகளில் மாற்றம் இல்லை! அராசங்கத்தின் புதிய அறிவிப்பு
முன்னைய அரசாங்கங்களின் பதவிக் காலத்தில் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தொடர்ந்தும் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களுக்கான வாகனங்கள், கொடுப்பனவுகள் மற்றும் பணியாளர்கள் தொடர்பான வரையறைகளை குறிப்பிட்டு ஜனாதிபதி செயலகம் சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அராசங்கத்தின் புதிய அறிவிப்பு
அதன் பிரகாரம் அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர்களுக்கான இரண்டு வாகனங்கள், நிலையான மற்றும் மொபைல் போன் கொடுப்பனவுகள், அலுவலகக் கொடுப்பனவுகள், ஒருங்கிணைப்புச் செயலாளர்கள் உள்ளிட்ட 15 பணியாளர்கள் உள்ளிட்ட சலுகைகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதியமைச்சர்களுக்கு மட்டும் பணியாளர் எண்ணிக்கை 12 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது மற்றபடி முன்னைய அரசாங்க காலங்களில் வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளும் தொடர்ந்தும் வழங்கப்படுவதை குறித்த சுற்றறிக்கை உறுதி செய்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |