நாட்டில் பிறப்பு விகிதம் வீழ்ச்சியால் ஏற்பட்டுள்ள நெருக்கடி: பேராசிரியர் எச்சரிக்கை
நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து வருவது எதிர்கால தொழிலாளர் துறைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 247,900 ஆகக் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பிறப்பு விகிதம் குறைவு என்பதில் நாட்டில் பல்வேறு வகையான பிரச்சினைகள் உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடுமையான நெருக்கடி
எதிர்காலத்தில் பாடசாலைகளில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவடையும். அத்துடன் தொழில்துறைகள் கடுமையான நெருக்கடிகளை எதிர்நோக்கவும் நேரிடும் அபாயம் உள்ளது.
இதற்கிடையில், நாட்டில் முதியோர் மக்கள் தொகை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டது.
இறப்பு விகிதம்
இதனால் சுகாதார சேவைகளில் நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் சுகாதார செலவு கடுமையாக அதிகரிக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
நாட்டில் இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அதுகோரல மேலும் தெரிவித்தார்.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
