முள்ளியவளையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி
முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுகயீனம் காரணமாகக் கடந்த 26.07.21 அன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் 27.07.21 அன்று இவருக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன அதன் முடிவு 28.07.21 இரவு வெளியாகியுள்ளது. அதன்படி இவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அனுராதபுரம் கெப்பட்டிக்கொலாவ வினை சேர்ந்த உத்தியோகத்தரே இவ்வாறு கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
இவருடன் தொடர்பினை பேணிய ஏனைய உத்தியோகத்தர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 23 மணி நேரம் முன்
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam