வவுனியாவில் 237 பேருக்கு கோவிட் தொற்று உறுதி! ஐந்து பேர் மரணம்
முதலாம் இணைப்பு
வவுனியாவில் கோவிட் தொற்று 239 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் சில நேற்று (01) இரவு வெளியாகியுள்ளன.
வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக கோவிட் தொற்று 239 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் நேரியகுளம், றம்பைவெட்டி, வேப்பங்குளம்,வோகஸ்வெவ, இளமருதங்குளம், தோணிக்கல், சூசைப்பிள்ளையார்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25,54,59,60,68,71, 72 வயதுடைய ஏழுபேர் கோவிட் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும் மரணித்த நால்வரது உடல்களையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் அதிகபட்சமாக 302 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் நான்கு மரணங்களும் நிகழ்ந்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று வீதம் நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்றது.
ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 3328 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன் 50 பேர் கோவிட் தொற்றினால் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(சதீஸ் அப்டேட் நியூஸ்)
வவுனியாவில் 237 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், ஐந்து பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று இரவு வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 237 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த வவுனியாவின் போகஸ்வேவ, றம்பைவெட்டி, தோணிக்கல், சூசைப்பிள்ளையார்குளம், இளமருதங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முறையே 60, 54, 71, 72, 58 ஆகிய வயதுகளையுடைய 5 பேர் கோவிட் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் மரணித்த 5 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, வவுனியா, செட்டிகுளம் பகுதியில் 25 வயது இளைஞன் ஒருவரும் நேற்று இரவு மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



