வவுனியாவில் 152 பேருக்கு கோவிட் தொற்று உறுதி! மூவர் மரணம்
வவுனியாவில் 152 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், மூவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று இரவு வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 152 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப்பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் வசிக்கும் 28 வயது இளைஞன் ஒருவர் திடீரென உடல் சுகவீனமுற்ற நிலையில், வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டிருந்தார். இருப்பினும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த இளைஞனுக்கு மேற்கொண்ட பிசீஆர் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், வவுனியா, புளியங்குளம் வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட 55 வயதுடைய நபரொருவர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
வவுனியா வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்ட போது அவர் மரணமடைந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தவிர, வவுனியா வைத்தியசாலையின் கோவிட் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த 66 வயது நபர் ஒருவரும் சிகிச்சை பலனின்றி மரமணைந்துள்ளார்.
இந்நிலையில் மரணித்த மூவரது உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam