மூன்றாவது தடவையாகவும் பொதுமக்களை ஏமாற்ற முனையும் அரசாங்கம்! சஜித் குற்றச்சாட்டு
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் மூன்றாவது தடவையாகவும் பொதுமக்களை ஏமாற்ற முனைவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
வௌ்ளிக்கிழமை (02) மாலை பிபிலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குற்றம் சாட்டியுள்ளார்.
பொய் வாக்குறுதி
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சஜித் பிரேமதாச,
இந்த அரசாங்கம் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஏராளம் வாக்குறுதிகளை அள்ளிவீசி பொதுமக்களை ஏமாற்றியது. அதன் பின்னர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசி அதிகாரத்தைக் கைப்பற்றியது.
இப்போது உள்ளூராட்சித் தேர்தலில் மூன்றாவது தடவையாக பொய் வாக்குறுதிகளை அள்ளிவீசி பொதுமக்களை ஏமாற்ற முனைகின்றனர்.
இந்த அரசாங்கம் பதவிக்கு வரும்போது இருந்த விலைகளை விட இப்போது அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது விவசாயிகளுக்கு தேவையான உரம் தட்டுப்பாடாக உள்ளது.
அனைத்துப் பொருட்களின் விலை
உரமானியம் இன்னும் கொஞ்ச காலத்தில் நிறுத்தப்பட்டுவிடும்.
பயிர்ச் செய்கை பாதிப்புக்கான இழப்பீடு வழங்குவதும் நிறுத்தப்பட்டுவிடும். அரிசி, தேங்காய் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகரித்துவிட்டது.
குறைந்த பட்சம் உப்பைக் கூட குறைந்த விலையில் தட்டுப்பாடின்றி இந்த அரசாங்கத்தினால் வழங்க முடியவில்லை என்றும் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் விமர்சித்துள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
