கொள்கையில் இருந்து பின்வாங்கும் அரசாங்கம்
,இறக்குமதி கொள்கையை மாற்றி, பிராந்திய நாடுகளில் இருந்து அரிசி, சீனி, மிளகாய், பருப்பு மற்றும் கோதுமை மா போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக மாதாந்தம் சுமார் 100-150 மில்லியன் அமெரிக்க டொலர்களை மத்திய வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளும் திட்டங்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது
அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்
இந்தநிலையில் மியன்மாரிலிருந்து அரசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் இந்தியாவில் இருந்து தனியார் துறை மூலம் பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் சாத்தியமான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அமைச்சர் அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு இலங்கையின் வர்த்தகக் குழுவை அழைத்துச்செல்லவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்
இதற்கிடையில் 1,000 க்கும் மேற்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் கொள்கலன்கள் துறைமுகத்தில் சிக்கியுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலர்கள் இல்லாமையே இதற்கான முக்கிய காரணம் என சங்கத்தின் தலைவர் ஜி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்
உரிமம் பெற்ற வங்கிகள் போதுமான டொலர்களை விநியோகிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
