எரிவாயு கிடைக்கப்பெற்றதையடுத்து மீண்டும் கோவிட் சடலங்கள் தகனம்: வவுனியா நகரசபை தவிசாளர்
வவுனியா நகரசபையின் பூந்தோட்டம் மயானத்திற்கு எரிவாயு கிடைக்கப் பெற்றதையடுத்து மீண்டும் கோவிட் சடலங்களைத் தகனம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.
கோவிட் சடலங்கள் தகனம் செய்வது தொடர்பில் இன்று அவர் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா நகரசபைக்குச் சொந்தமான பூந்தோட்டம் மின் மயானத்தில் கோவிட் தொற்றால் மரணிப்பவர்களின் உடலங்கள் தகனம் செய்யப்பட்டு வந்தன. எரிவாயு தட்டுப்பாடு நிலவும் நிலையில் மின் மயானத்தில் எரிவாயு முடிந்தமையால் கடந்த சில நாட்களாக மின் மயானத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் கோவிட் தொற்று காரணமாக மரணமடைந்த சிலரது உடல்கள் தகனம் செய்ய முடியாது திருப்பி அனுப்பப்பட்டன. இந்நிலை தொடர்பில் சுகாதாரப் பிரிவினர், மாவட்ட அரச அதிபர் ஆகியோருக்கும் தெரியப்படுத்தியிருந்தோம்.
வவுனியா மாவட்ட அரச அதிபரால் மின் மயானத்திற்கு நான்கு எரிவாயு சிலின்டர்கள் பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் கோவிட் சடலங்களைத் தகனம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனவே, கோவிட் தொற்று காரணமாக மரணிப்பவர்களின் சடலங்களை வழமை போன்று
தொடர்ந்தும் வவுனியா நகரசபையின் பூந்தோட்டம் மின் மயானத்தில் தகனம் செய்ய
முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
