மருத்துவ நிபுணர்கள் விடுத்துள்ள கோரிக்கைகளை ஏற்றுள்ள அரசு
தமக்கு கூடுதல் கடமைக் கொடுப்பனவுகளுக்கு நிலையான கொடுப்பனவை வழங்க வேண்டும் என்றும், 2025 பாதீட்டில் நிபுணர்களின் ஊதியம் கருத்திற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பிரதி நிதியமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோவை இன்று(7) சந்தித்து, இந்தக் கோரிக்கையை மருத்துவ நிபுணர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால்(Nalinda Jayatissa) இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிறப்பு கொடுப்பனவு
SL3 தர அதிகாரிகளுடன் இணையான சம்பள சமத்துவத்தை கோரிய மருத்துவ நிபுணர்கள் சங்கம், போக்குவரத்து கொடுப்பனவில் மருத்துவ நிபுணர்களைச் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

அத்துடன் கற்பித்தல் மற்றும் நிர்வாகப் பணிகள் போன்ற மருத்துவம் அல்லாத பணிகளுக்கு ஒரு சிறப்பு கொடுப்பனவையும் மருத்துவ நிபுணர்கள் சங்கத்தினர் கோரியுள்ளனர்.
இந்தநிலையில் குறித்த கோரிக்கைகளுக்கு பதிலளித்த அமைச்சர் பெர்னாண்டோ, குறித்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam