பாதுகாப்பு படைகளின் தலைமை பதவி குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி பதவி இரத்துச்செய்யப்படலாம் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துயகொண்டா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
2024 டிசம்பரில் ஓய்வு
புதிய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஏன் இன்னும் நியமிக்கப்படவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டபோது, பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியால் மேற்கொள்ளப்படும் பணிகள் பாதுகாப்பு அமைச்சினால் நிர்வகிக்கப்படுகின்றன என்று பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளார்.
தற்போதைய நிலையில், பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி தேவையில்லை எனினும், பிற்காலத்தில் தேவை ஏற்பட்டால் அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கையின் கடைசி பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியாக பதவி வகித்தார்.
அவர் 2024 டிசம்பரில் தமது பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
