வெளிநாட்டவர்களால் நீச்சல் குளத்தில் தள்ளிவிடப்பட்ட இலங்கையின் பெண் அதிகாரி
களுத்துறை வாதுவையில் உள்ள, ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றும் ஒரு பெண் நிர்வாக மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர், போலந்து நாட்டவர்கள் சிலரின் செயலால், நோய்வாய்ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2025 ஜனவரி 19 ஆம் திகதியன்று, மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் போலந்து நாட்டவர்கள் சிலர் , ஹோட்டலின் நீச்சல் தடாகத்துக்குள் குறித்த பெண் அதிகாரியை(40 வயது )தள்ளியதாக தெரிவிக்கப்படுகின்றது.
தடாகத்தில் விழுந்ததால் அவருக்கு எலும்பு முறிவு மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இதனையடுத்து அவர் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
பாணந்துறையைச் சேர்ந்த அந்த அதிகாரி, சுற்றுலாப் பயணிகள் குழுவை குளத்தை விட்டு வெளியேறுமாறு கூறியபோதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தநிலையில் குறித்த போலந்து நாட்டவர்கள் குழு நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை சம்பவத்தைத் தொடர்ந்து பெண் அதிகாரியை தொடர்பில் ஹோட்டல் நிர்வாகம் பாராமுகமாக செயற்பட்டதாக சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

The Fantastic Four: First Steps மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
