தேசிய பாதுகாப்பு நிலைமை குறித்து அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு!
இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித பிரச்சினைகளும் கிடையாது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு மற்றும் அரச பாதுகாப்பு ஆகியன தற்போது மிகவும் உயர்ந்த மற்றும் பலமான மட்டத்தில் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மக்களுக்குப் பல நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்தும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
களமட்டத்திலான உண்மை நிலைமைகளை அவதானிக்கும் போது எவ்வித வீழ்ச்சியுமின்றி தேசிய பாதுகாப்பு மிகவும் பாதுகாப்பான மட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை தெளிவாகத் தெரிகிறது என பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.