யாழ்.மாவட்ட மக்களுக்கு கோவிட் தடுப்பூசிகள்
யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு கோவிட் 19 தடுப்பூசிகள் வழங்கும் திட்டம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை பிரதமரின் இணைக்கு செயலாளர் கீதநாதன் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
The public in #Jaffna will begin to receive their #COVID19 vaccinations from Sunday when the vaccination program will extend into the north. Health authorities currently finalizing vaccination centers & will announce it shortly. Get your jabs soon! #lka @RajapaksaNamal
— G. Cassilingham (@CassilingamG) May 28, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 16 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளிலும் கிராம அலுவலக பிரிவு ரீதியில் கோவிட் 19 தடுப்பூசிகள் மருந்து வழங்கும் பணி முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் 19 நோய்த்தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்படும் இடங்களுக்கு தடுப்பூசிகள் மருந்து வழங்கல் முன்னுரிமையளிக்கப்படும் என்றும் பிரதமரின் இணைப்பு செயலாளர் கீதநாதன் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.