இலங்கை மக்களுக்கு 2022ஆம் ஆண்டு எப்படி அமையப் போகிறது? பகிரங்க எச்சரிக்கை
2022 ஆம் ஆண்டில் இந்த அரசாங்கத்திற்கு முன்னால் பல சவால்கள் உள்ளன. இந்தநிலையில் எதிர்க்கட்சி என்ற ரீதியில், ஜனாதிபதிக்கு மேலும் கால அவகாசம் வழங்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
நாட்டு மக்கள் உண்பதற்கு அரிசி மற்றும் காய்கறிகளை வழங்க வேண்டும். போதிய எரிபொருள் இல்லை. எனவே இந்த அரசாங்கத்தை மிக விரைவில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
நாட்டின் விவசாயிகள் ஒரு மண்வெட்டி, உழவு இயந்திரம் போன்றவற்றுடன் வந்து அரசாங்கத்துடன் போர் புரிய வேண்டும். இலங்கையின் வரலாற்றில் இவ்வளவு மக்களை ஒடுக்கும் அரசாங்கம் ஒன்று இருக்கவில்லை என்றும் நளின் பண்டார தெரிவித்தார்.
இலங்கைக்கு ஆண்டுக்கு 2.8 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசி தேவை, இதில் 65% பெரும்போகத்தில் இருந்து வருகிறது. தற்போதுள்ள தரவுகளின்படி, பெரும் போகத்தில் 50% குறைவான அறுவடையை மாத்திரமே நாடு பெற்றுள்ளது
910000 மெட்ரிக் டொன் அரிசியே கிடைக்கிறது. எனவே அதே அளவு அரிசியை இறக்குமதி செய்ய வேண்டும். இறக்குமதியின்போது ஒரு கிலோ அரிசிக்கு 364 மில்லியன் டொலர் செலவாகும்.
அந்தப் பணம் இந்த அரசாங்கத்திம் உள்ளதா? என்று நளின் பண்டார கேள்வி எழுப்பினார் நாட்டு மக்களுக்கு அடுத்த வருடம் உண்பதற்கு அரிசி இல்லை.நெல் வயல்களும் பாலைவனமாகி போகும். இறக்குமதி செய்ய பணமுமில்லை. எனவே 2022 ஆண்டு,பஞ்சம், உணவு பற்றாக்குறை மற்றும் மரணங்கள் நிகழும் ஆண்டாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.