Govpay திட்ட அறிமுக நிகழ்வு இன்று
அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘Govpay’ திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் பூர்வாங்க நிகழ்வு இன்று (07) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில் நடைபெறவுள்ளது.
வெளிநாட்டு தூதரகங்களில் இலத்திரனியல் முறை
பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடியவாறு, இத்திட்டத்தின் ஊடாக அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து நவீனமயப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வெளிநாட்டு தூதரகங்களில் இலத்திரனியல் முறையில் பிறப்பு, திருமண மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் வசதியை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான (EBMD) வசதியளித்தல் என்பன நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
