இலங்கையில் இடம்பெற்ற 30 வருட உள்நாட்டு போர்! மீண்டும் அதேநிலைமை வரலாமென எச்சரிக்கை
இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற 30 வருட உள்நாட்டு போரை போன்று எதிர்காலத்திலும் வரக்கூடிய வகையில் தமிழ் மக்களுக்கு அதிகாரிகள் மட்டத்தில் துன்புறுத்தல் அரங்கேறியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் கடந்த காலங்களில் தமிழ் பேசும் மக்கள் இரண்டாம் தர பிரஜைகளாக நடத்தப்பட்டதன் நிமித்தம் இந்த நாடு 30 வருடங்களுக்கு மேலாக ஒரு உள்நாட்டு போரை சந்தித்திருந்தது.
அந்த போரின் மூலமாக தமிழ், சிங்களம், முஸ்லிம் என பல்லாயிரக்கணக்கான உயிர்களை இந்த நாடு இழந்திருக்கிறது.
இருந்தும் 2009இல் அந்த போர் மௌனிக்கப்பட்டிருந்தாலும் அந்த போர் எதற்காக தொடங்கப்பட்டது, எப்படி தொடங்கப்பட்டது என்பதற்கு ஓர் உதாரணமாக மீண்டும் எதிர்காலத்திலே இப்படியொரு நிலைமை வரக்கூடிய சூழ்நிலைக்கு இந்த அரசாங்கம், இந்த அரசாங்கத்துடன் இருக்கும் மேலதிகாரிகள் தமிழ் பேசும் மக்களை ஒடுக்கி, அவர்களை துன்புறுத்தும் நிலைமை அதிகாரிகள் மட்டத்தில் மீண்டும் ஒருமுறை அரங்கேறியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam