வாக்குகளை பிளவுபடுத்தும் சுயேட்சை குழுக்கள்: கருணாகரம் குற்றச்சாட்டு
பல ஆயிரக் கணக்கான நிதிகளை செலவிட்டு களமிறங்கியுள்ள சுயேட்சை குழுக்கள் இம்முறை தமிழர்களின்
வாக்குகளை பிரித்தவருக்கு பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின்
முதன்மை வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துளார்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (20.10.2024) மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷின் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சுயேட்சை குழுக்கள்
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் பொது தேர்தலானது வடக்கு - கிழக்கிற்கு ஒரு முக்கியமான தேர்தலாக காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலே பல சுயேட்சை குழுக்கள் இம்முறை களமிறங்கப்பட்டுள்ளன.
அவர்கள் பல ஆயிரக் கணக்கான நிதியை செலவிட்டு அரசியல் செய்கின்றனர்.
இது யாருக்காக? இதில் பல சுயேட்சை குழுக்கள் தமிழர்களின் வாக்குகளை பிரித்து மாற்றினத்த வருக்கு ஆசனங்களைப் பெற வேண்டும் என்ற காரணத்தினால் திட்டமிட்டு இறக்கப்பட்டுள்ளன'' என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |