யாழ். சிறைச்சாலையில் 38பேர் போதைப்பொருளுக்கு அடிமை! ஆளுநரின் நடவடிக்கை (Video)
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை, வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்படுவோரின் நிலை மற்றும் சிறைச்சாலையின் தற்போதைய நிலைமை தொடர்பில் குறித்த பயணத்தின் போது ஆராய்ந்துள்ளார்.
யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு இன்று பிற்பகல் பயணம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆளுநர்,
யாழ்ப்பாணச் சிறைச்சாலையில்,போதைக்கு அடிமையானவர்கள் சுமார் 38 பேர் வரையில் காணப்படுவதாகவும், அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய நபர்களை யாழ்ப்பாணச் சிறையில் சென்று இன்று பார்வையிட்டோம்.
அவர்கள் என்ன வகையான போதைப்பொருளை பயன்படுத்துகிறார்கள், என்று ஆராய்ந்தோம். அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் உள்ளது. ஆகவே சிறையில் உள்ள காலத்தில் அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் உழைப்புக்கான பயிற்சிகளை வழங்கலாம், அதற்கு என்ன திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று ஆராய்ந்து வருகின்றோம்.
அவர்களின் மனதில் என்ன உள்ளது என்று எமக்கு தெரியாது. ஆனால் அவர்கள் வெளியே வரும்போது வாழ்க்கை ஒன்றை கொண்டு நடாத்துபவர்களாக மாறி இருக்க வேண்டும். 38 நபர்கள் தற்போதுவரை சிறையில் உள்ளனர்.
யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருப்பதால், மேலும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வெளியே வரும் சாத்தியங்கள் இல்லை. அதற்கு ஏற்ற வகையில் இறுக்கமான நடைமுறைகள் சிறைச்சாலையில் காணப்படுகிறது.பார்க்கலாம் இனி என்ன செய்யலாம்” என்று தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
