ஆளுநர் செந்தில் - ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு: அபிவிருத்தி தொடர்பில் பேச்சு (Photos)
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்க்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நேற்று (22.07.2023)மாலை திருகோணமலை ஆளுநர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது கிழக்கு மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பாகவும் கிழக்கு மாகாண ஏனைய அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், அண்மையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலையத்தில் காத்தான்குடி பிரதேச கல்வி பணிப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநர் கவனத்திற்கு கொண்டுவந்து அது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்று இறுதித்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி
அத்துடன், எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் அபிவிருத்தி தொடர்பாகச் சகல ஒத்துழைப்புக்களை வழங்குவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையடலில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், ஶ்ரீலங்கா ஹிரா பொளண்டேஸன் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் மும்தாஸ் மதனி , மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி பணிப்பாளர் அமீர், காத்தான்குடி பிரதேச கல்வி பணிப்பாளர் ஹக்கீம், முன்னாள் காத்தான்குடி பிரதேச கல்வி பணிப்பாளர் கலாவூத்தீன் , காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலய அதிபர் யூனூஸ் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
