விரைவில் எழுச்சி பெற உள்ள வடக்கு மாகாணம்: ஆளுநர் நம்பிக்கை
இந்த அரசாங்கத்தின் காலத்தில் வடக்கு மாகாணம் விரைவில் எழுச்சி பெற்ற மாகாணமாக மிளிரும் என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
காரைநகர் சீநோர் படகுத்தளத்தின் புனரமைப்பு வடிவமைப்புத் திட்ட நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நான் சிறுவனாக இருந்த காலத்தில் இந்த சீநோர் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றியதாக கேள்விப்பட்டிருக்கின்றேன். அவ்வளவு தூரம் இந்த நிறுவனம் பிரபல்யமாக இருந்தது.
வேலைவாய்ப்பு
இன்று அதன் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மீண்டும் இந்த நிறுவனம் முன்னரைப்போன்று ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை வழங்கவேண்டும்.
இந்த அரசாங்கம் வடக்கு மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றது. அத்தோடு தொழிற்சாலைகளையும் மீள உருவாக்கி வருகின்றது. எமது மாகாணத்துக்கு தேவையாக உள்ள வேலைவாய்ப்பும், வருமானம் ஈட்டலும் இதனூடாக கிடைக்கப்பெறும்.
எமது மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் கூடுதலான அக்கறையுடன் செயற்படுகின்ற அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் எமது மாகாணத்துக்கு எவ்வாறான உதவிகளைச் செய்யவேண்டும் என்று அடிக்கடி கேட்டுக்கொண்டிருக்கின்ற அமைச்சர் சந்திரசேகர் ஆகிய இருவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் எனது நன்றிகளையும் கூறிக்கொள்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

ட்ரம்ப் மனைவியிடம் பேசிக்கொண்டிருந்த இளவரசி கேட்டை முறைத்த ராணி கமீலா? இணையத்தில் வைரலாகும் செய்தி News Lankasri
