வட மேல் மாகாண ஆளுனர் காலமானார்!
கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த வட மேல் மாகாண ஆளுனர் ராஜா கொலுரே காலமாகியுள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த அவர் தனது 83வது வயதில் உயிரிழந்துள்ளார்.
கோவிட் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் வடமேல் மாகாண ஆளுனர் காலமானார்
வடமேல் மாகாண ஆளுனர் கோவிட் பெருந்தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். வடமேல் மாகாண ஆளுனர் ராஜா கொலுரே உயிரிழந்துள்ளதாக ஆளுனர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறக்கும் போது அன்னாருக்கு 83 வயது என்பது குறிப்பிடத்தக்கது. சிரேஸ்ட சட்டத்தரணியான ராஜா கொலுரே, ஶ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜா கொலுரே கோவிட் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். எவ்வாறெனினும் இது கோவிட் மரணமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லலை.
மேலதிக தகவல் - கமல்





தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
