இந்திய முதலீட்டாளர்களுடன் நேரில் சென்று கலந்துரையாடிய வடமேல் மாகாண ஆளுநர்
வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் (Nazeer Ahmed), ஏறாவூர் (Eravur) முதலீட்டு வலயத்தின் அபிவிருத்திப் பணிகள் குறித்து இந்திய முதலீட்டாளர்களுடன் நேரில் சென்று பரிசீலனை நடாத்தியுள்ளார்.
குறித்த பரிசீலனை நிகழ்வு, நேற்றையதினம் (04.05.2024) இடம்பெற்றுள்ளது.
ஏறாவூரில் ஆடைக் கைத்தொழில் முதலீட்டு வலயம் அமைப்பதற்கு கடந்த 26.10.2020 அன்று அமைச்சரவைத் தீர்மானம் எட்டப்பட்டிருந்தது.
தொழில் வாய்ப்பு
இதற்கு அமைவாக புன்னைக்குடா கடற்கரையோரப் பகுதியில் ஆடைக் கைத்தொழில் முதலீட்டு வலயம் அமைப்பதற்கான அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இது கிழக்கு மாகாணத்தில் துணி உற்பத்தி தொடர்பான தொழில் முயற்சிக்கென அமையவிருக்கும் விஷேட, பிரமாண்ட கைத்தொழில் வலயமாகும்.
இந்த ஆடைக் கைத்தொழில் முதலீட்டு வலயம் இயங்கத் துவங்குமாயின் அங்கு பல்வேறு தொழிற் தரங்களில் சுமார் 2,000 பேர் நேரடியாகவும் சுமார் அதே எண்ணிக்கையிலானோர் மறைமுகமாகவும் தொழில் வாய்ப்பைப் பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாமதமான அபிவிருத்திப் பணிகள்
கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த முதலீட்டு வலயத்திற்கான அபிவிருத்திப் பணிகள் தாமதமாகியிருக்கின்ற போதிலும் தற்போது துரித கதியில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ஆளுனருடன் வந்த இந்திய ஆடை உற்பத்தி முதலீட்டாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியில் பாரிய ஆடைத் தொழிற்சாலைகளை நிர்மாணிக்க தாம் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - நிலவன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri
